பாகிஸ்தானை சூழ்ந்த புகை மண்டலம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
பாகிஸ்தானில் காற்றின் தரம் 760 – 1,914 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக முல்தான் மாறியுள்ளது, இதன் காரணமாக அதிகாரிகள் மாசு அளவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
லாகூரில், கடுமையான புகை மூட்டத்தால், சாலைகளில் பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் புகை மூட்டம் காரணமாக சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறைந்தது 9 பேர் விபத்துக்களால் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாகூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் அனைத்து சந்தைகளும் வர்த்தக நடவடிக்கைகளும் இன்று மூடப்பட்டுள்ளன. வாரத்தின் மற்ற நாட்களில், சந்தைகளை இரவு 8 மணிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானின் பஞ்சாபில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது, மாசு அளவைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை செயல்படுத்தி, உயர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.