ஐரோப்பா

பிரித்தானியாவில் விலைவாசி உயர்வால் இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

பிரித்தானியாவில் விலைவாசி உயர்வு காரணமாக, இராணுவ வீரர்கள் உணவு வங்கிகளை நாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய இராணுவ வீரர்கள் சிலர், தங்கள் உணவகத்தில் சலுகை விலையில் வழங்கப்படும் உணவுப்பொருட்களைக்கூட வாங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், சிலரோ, போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லாததால், வீட்டுக்குச் சென்று தங்கள் அன்பிற்குரியவர்களைக் காண முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சொல்லப்போனால், Lincolnshire இராணுவ விமான தளத்திலேயே ஒரு உணவு வங்கி அமைக்கப்பட்டுள்ளதாம்.பெண் விமானி ஒருவர், தான் வைத்திருந்த பணத்தை தன் குழந்தைக்கு பால் பவுடர் வாங்க பயன்படுத்திவிட்டதால், நான்கு நாட்களுக்கு சூடான உணவு இல்லாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இராணுவ வீரர்கள் உயிர் பிழைப்பதற்காக தொண்டு நிறுவனங்களை நாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது, கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார் வீரர் ஒருவர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!