பாரிஸில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு ; இரு பொலிஸார் படுகாயம்
பாரிஸில் பொலிஸ் நிலையமொன்றிற்குள் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
பெண் ஒருவரை தாக்கியமைக்காக கைதுசெய்ய்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்
இதன்போது படு காயமடைந்த இரு பொலிஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதும் பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.





