போர்த்துக்கல் சென்ற சுற்றுலா பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி
																																		போர்த்துக்கல் சென்ற சுற்றுப்பயணிக்கு மொழி தெரியாமல் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த நபர் மாதுளை பாணம் வாங்க முயற்சித்து சிறை செல்லும் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
போர்த்துக்கல் மொழியில் மாதுளை பாணத்தின் பெயரை அறிவதற்கு அவர் மொழிபெயர்ப்புச் செயலியைப் பயன்படுத்தினார்.
உணவக ஊழியரிடம் நபர் பழரசம் கேட்ட போதிலும் பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து அவரை கைது செய்துள்ளனர்.
‘மாதுளை’ என்று எண்ணி போர்ச்சுகல் மொழியில் சொன்ன வார்த்தை, உண்மையில் கையெறி குண்டைக் குறிப்பிட்டதை நபர பின்னரே அறிந்தார். செயலி, தவறான மொழிபெயர்ப்பை அளித்திருந்தது. கையெறி குண்டு வைத்திருப்பதாக நபர் சொன்னதாகப் புரிந்துகொண்ட உணவக ஊழியர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துவிட்டார்.
உணவகத்திலும் அவர் தங்கிய ஹோட்டல் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆயுதங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால், நபர் விடுவிக்கப்பட்டார்.
        



                        
                            
