வட அமெரிக்கா

கியூபாவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி… 500 சதவீதம் உயரவுள்ள பெட்ரோல் விலை!

கியூபாவில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோலின் விலையை 500 சதவீதம் உயர்த்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்கா அருகில் உள்ள குட்டித் தீவான கியூபாவில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி உச்சகட்டத்திற்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் உள்நாட்டில் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் நாட்டின் பெரும்பான்மையான சேவைகள் அரசு சார்ந்தது என்பதால் நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்து வந்தது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்வதால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு கியூபா உள்ளாகியுள்ளது.

அமெரிக்காவின் தொடர் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிச நாடுகளில் இருந்து கிடைக்கும் பொருள் உதவிகளும் குறைந்துள்ளதால் அந்நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்பு உலகிலேயே மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை கடுமையாக உயர்த்துவது என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Cuba Govt Hike Fuel Prices By Over 500 Percent • Channels Television

இதன்படி பெட்ரோலின் விலை 25 பெசோவில் இருந்து 132 பெசோக்களாக அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இது ஒரு லிட்டருக்கு ரூ.456 உயர்வாகும். ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் நிலையில் பெட்ரோலின் விலை 500 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விலைவாசிகள் மேலும் உயரும் என்கிற அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது. உலகில் மிகவும் குறைவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வந்த போதும், அந்நாட்டு மக்களின் வருமானத்தோடு ஒப்பிடும்போது பெட்ரோலின் விலை மிகவும் அதிகம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோலை தொடர்ந்து வீட்டு பயன்பாட்டிற்கான மின்சாரத்தின் விலையையும் 25 சதவீதம் அளவிற்கு அதிகரிக்க கியூபா முடிவு செய்துள்ளது. மேலும் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த விலை உயர்வுகள் வருகிற பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!