உலகம் செய்தி

MH370 விமானத்தை தேடும் பணி மீள ஆரம்பம்!

2014 ஆம் ஆண்டு காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 ஐத் தேடும் பணி டிசம்பர் 30 ஆம் திகதி மீளவும் ஆரம்பிக்கப்படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களை ஏற்றிச் சென்ற போயிங் 777 விமானம் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் மாயமானது.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக விமானம் குறித்த மர்மம் நீடித்து வருகிறது. அண்மையில் இந்த விமானம் விபத்துக்குள்ளானத்தை கண்டதாக நபர் ஒருவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விமானத்தை கண்டுப்பிடிப்பதற்கான முயற்சிகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓஷன் இன்ஃபினிட்டி (Ocean Infinity) தெற்கு இந்தியப் பெருங்கடலில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்காக 55 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15,000 சதுர கி.மீ பரப்பளவில் கணிசமான இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், ஓஷன் இன்ஃபினிட்டி மலேசிய அரசாங்கத்திடமிருந்து 70 மில்லியன் டொலர்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!