ஐரோப்பா

அக்கம் பக்கத்தினரு கேட்ட அலறல் சத்தம்.. சடலமாக மீட்கப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகள்!

போலந்து நாட்டில் தந்தையும் மகளும் தகாத உறவில் இருந்ததாக கூறும் குடியிருப்பில் இருந்து மூன்று பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தில் கைதாகியுள்ள 54 வயது Piotr மற்றும் 20 வயது Paulina ஆகிய இருவரும் ஆயுள் தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றே கூறப்படுகிறது. வடக்கு போலந்தின் Czerniki கிராமத்திலேயே இந்த முகம் சுழிக்கவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

அந்த தந்தை மற்றும் மகள் மீது சந்தேகம் இருந்து வந்ததாகவே அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். அந்த நபர் தமது பிள்ளைகளை மிக மோசமாக திட்டுவார் எனவும், அலறுவார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.சில வேளைகளில் சிறார்களின் அழுகைக் குரல்கள் கேட்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு மூன்று பச்சிளம் குழந்தைகளின் சடலம் மிக மோசமாக அழுகிய நிலையில் காணப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர்கள் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.

PHOTO Horror house where dead babies were found. Neighbors: The father  molested his daughter, screams were heard - Breaking News in USA Today

வெள்ளிக்கிழமை இரண்டு சடலங்களும், சனிக்கிழமை ஒன்றும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. கைதான அந்த பெண் மீது இரண்டு பிரிவுகளில் கொலை வழக்கும், சொந்த தந்தையுடன் தகாத உறவை முன்னெடுத்ததாக வழக்கும் பதியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.அந்த நபர் மீதும் கொலை வழக்கும், 20 வயதான மகளுடன் தகாத உறவின் அடிப்படையிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மூன்று சடலங்களில் இரண்டு ஒரு மகளுடனும் மூன்றாவது சடலம் இன்னொரு மகளுடனும் ஏற்பட்ட முறைதவறிய நெருக்கத்தால் உருவானது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

54 வயதான Piotr தமது மனைவி இறந்த பின்னர் 10 அல்லது 12 பிள்ளைகளை தனியாக வளர்த்து வந்தார் என உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content