இலங்கை

புதுக்குடியிருப்பில் மாணன் ஒருவரை புலமைபரிசில் பரீட்சை எழுதவிடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்விகற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவன் வயிற்றில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட காரணத்தினால் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்றுவந்துள்ளான். இதனால் பாடசாலை செல்லவில்லை என்ற காரணத்தினால் அந்த மாணவனை தரம் 5 புலமை பரிசில் பரீட்சை எழுதவிடாது பாடசாலை சமூகம் தடுத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் கூலிவேலைசெய்து தங்கள் குடும்பத்தினை கொண்டு செல்லும் குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான தரம் 5 இல் கல்விகற்ற மாணவனுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது அவனது அக்காவான சகோதரி தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கல்வி கற்று வருகின்றார்.

இந்த நிலையில் குறித்த மாணவனை புலமை பரிசில் பரீட்சைக்காக பெற்றோர்கள் தயார் படுத்தியுள்ளார்கள் இதன்போது குறித்த மாணவனக்கு வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக வயிற்று பகுதியில் பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனால் குறித்த மாணவன் இரண்டு மாத காலமாக பாடசாலை செல்லவில்லை அதற்கான மருத்துவஅறிக்கையினையும் பெற்றோர்கள் காட்டியுள்ளார்கள்

See also  மகிந்த வீட்டில் மின்வெட்டு

Grade 5 scholarship exam schedule changed – Sri Lanka Mirror – Right to  Know. Power to Change
இந்த நிலையில் புலமை பரிசீல் பரீட்சைக்கான நாள் கடந்த 15.10.2023 அன்று நெருங்கி வந்த வேளை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பெற்றோரை அழைத்து குறித்த மாணவனை பரீட்சை எழுத அனுமதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளர்.இது தொடர்பில் பாடசாலை அதிபரிடமும் பெற்றோர்கள் முறையிட்ட போது மாணவன் 70 புள்ளிகளுக்கு கீழ்த்தான் பரீட்சைகளில் புள்ளி எடுக்கின்றார் இது போதாது புலமை பரிசில் பரீட்சை முக்கியமில்லை அதனால் பிரச்சினை இல்லை பிறகு படிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாடசாலை நிர்வாகம் பெற்றோரிடம் கடிதம் ஒன்றினை எழுதி கையெழுத்தும் வாக்கியுள்ளது.பாடசாலை நிர்வாகம் தங்கள் பரீட்சை விகிதாசாரத்தினை சிறப்பாக காட்டவேண்டும் என்பதற்காக ஒரு மாணவனை பரீட்சை எழுதவிடாமல் தடுத்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் மாணவன் உளவியல்ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்போது பாடசாலை போவதற்கு விருப்பம் அற்ற நிலையில் பரீட்சை எழுதாதது அவனது பெரிய ஒரு ஆசையினை தடுத்துள்ளதை போன்று காணப்படுவதாகவும் அவனுக்கு மனக்கவலையாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

See also  உலக சுகாதார அமைப்பிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த விருது

இது தொடர்பில் யாரிடமும் முறையிட முடியாத நிலையில் குறித்த குடும்பம் இவ்வளவு காலமும் இருந்து வந்துள்ள நிலையில் 05.11.2023 அன்று இந்த தகவல் முல்லைத்தீவு ஊடகவியலாளருக்கு கிடைக்கப்பெற்று குறித்தவீட்டிற்கு சென்று சம்பவத்தினை நேரடியாக விசாரித்து இது தொடர்பிலான செய்தி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறான பாடசாலை சமூகமும் எங்கள் மத்தியில் இருக்கின்றார்கள்

பாடசாலை சமூகம் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக ஒரு பாடசாலை மாணவரின் பரீட்சையினை தடைசெய்வது அவனை தடுப்பது என்பது மனித உரிமை மீறல்களில் ஒன்றாக கருதப்படவேண்டும் இது தொடர்பில் கல்வி திணைக்களமோ கோட்டக்கல்வி அலுவலகமோ,சிறுவர் உரிமைதொடர்பில் அக்கறை கொண்ட அமைப்புக்களோ உடனடியாக கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதுடன் இனி இவ்வாறான சம்பவம் வேறு எந்த கஸ்ரப்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கும் ஏற்படக்கூடாது என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாகும்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content