இலங்கை செய்தி

யாழில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவனின் விபரீத முடிவு

யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் . நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் மாணவன் ஒருவர் , தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையாகி , கடந்த மூன்று மாத கால பகுதிக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாது , வீட்டில் இருந்து தொலைபேசி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மாணவன் பாடசாலைக்கு மூன்று மாத காலப்பகுதிக்கு மேலாக சமூகமளிக்காததால் , பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் பெற்றோரின் கவனத்திற்கு அதனை கொண்டு சென்று , மாணவனை பாடசாலை அனுப்புமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதனால் , தந்தை மாணவனின் கையடக்க தொலைபேசியை பறித்து வைத்துள்ளார். அதனால் கோபமடைந்த மாணவன் வீட்டை விட்டு கடந்த 25ஆம் திகதி வெளியேறி சென்றுள்ளான்.

மாணவன் மீண்டும் வீடு திரும்பாததால் , பெற்றோர் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்தனர்

இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை கிளிநொச்சியில் வசிக்கும் மாணவனின் உறவினர் ஒருவர், தனது வீட்டிலையே மாணவன் தங்கி இருந்ததாக கூறி மாணவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை மாணவன் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளான்.

மரணம் தொடர்பில் மரண விசாரணைகளை மேற்கொண்ட , பின்னர் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் மாணவனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை