பாதாள உலக குழுக்களின் பழிக்கு பழி தொடரும் அபாயம்

பாதாள உலக தலைவர்களிடையே நிலவும் போட்டா போட்டி மீண்டும் தொடரும் அபாயகரமான நிலையை உருவாக்கி வருவதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்களில் இருந்து தெரிய வருகிறது.
பல இடங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் நிலைமையை கட்டுப் பாட்டில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வருவதாக உயரதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலைமையில் கணேமுல்ல சஞ்சீவக் கொலையின் பிரதான சூத்திரதாரி கரேஷா செவ்வந்தி பாதுகாப்பு தரப்புக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து தப்பித்து வருகிறார்.
அத்துடன் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் தற்போது துபாயில் வசித்து வருவோம் கெஹெல்பத்தர பத்மே குடும்பத்தினர் அவரது நண்பர்கள் சஞ்சீவவின் தரப்பினரால் இலக்கு வைக்கப் பட்டு வருவதாக தொடரும் செய்திகள் தெரிவிக்கின்றன
மினுவாங்கொகொடையில் இன்று கைத் துப்பாக்கியால் சுடப் பட்டு காயமடைந்தவர் பத்மேயின் பணவசூலிப்பு வேலைகளில் ஈடுபட்ட வந்த அவரது பாடசாலை நண்பரான 36 வயதுடைய நபர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதே வேளை கெஹெல்பத்தர பத்மேயின் மனைவியின் வீட்டை வீடியோ செய்த இருவர் பொலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
துபாயிலிருந்து கிடைத்த உத்தரவு உத்தரவின் பேரில் தான் இதனை செய்ததாக அவர்கள் பொலீசாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.
இதனிடையே புதுக்கடை நீதிமன்றத்தில் இடம் பெற்ற சஞ்சீவ மரணம் தொடர்பில் 40 பேருக்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது.
அன்றைய தினம் சம்பவத்துக்கு முகம் கொடுத்த நீதிமன்ற நீதவான் இடமும் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு தரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அன்றைய தினம் சஞ்சீவவை நீதிமன்றத்திற்கு ஆஜர் செய்ய நீதவான் உத்தரவு வழங்கப்படாமல் அவர் அழைத்து வரப்பட்டமை விளக்கமறியல் சிறைக் கூண்டில் கண்டெக்கப்பட்ட ஒரு கையடக்க தொலைபேசி செவ்வந்தியின் சகோதரனின் வங்கிக் கணக்குக்கு துபாயில் இருந்து வைப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பணம் சஞ்சீவ தீர்த்துக் கட்டப்பட்டவுடன்?செவ்வந்தி தனது சகோதரனுக்கு அனுப்பிய செய்திகள் உட்பட சம்பவங்களுடன் தொடர்பற்ற பலரிடமும் இருந்து பெறப்பட்ட இதற்கான சான்றுகள் தொடர்ந்தும் விசாரணைக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சூத்திரதாரி செவ்வந்தி கைது செய்யப்படாமல் இருப்பது இவ்விசாரணைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதுடன் எதிர்க்கட்சிகள் இதனை அரசாங்கத்தின் பலவீனமாக சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.