அமெரிக்க அரசாங்கத்தின் செயற்பாடுகள் நின்றுபோகும் அபாயம்
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு முன் அரசாங்கத்தின் செயல்பாடு நின்றுபோகக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களவை, குடியரசுக் கட்சியின் செலவின சட்டமூலம் நிராகரித்தது அதற்குக் காரணமாகும்.
ஜனாதிபதி பொறுப்பேற்கவிருக்கும் டொனல்ட் டிரம்ப்பும் அவரது ஆலோசகர் செல்வந்தர் எலோன் மஸ்கிற்கும் சட்டமூலத்திற்கு ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.
இருகட்சி ஆதரவிலான மசோதா ஒன்றை அவ்விருவரும் முன்பு நிராகரித்ததைத் தொடர்ந்து, மக்களவையில் உள்ள சில குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் செலவின சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.





