அரச வங்கிகளின் மறுசீரமைப்பு தொடர்பில் உடன் தெளிவுப்படுத்த வேண்டும்
அரச வங்கிகளின் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தெளிவான அறிக்கையை முன்வைக்க வேண்டும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கோருகின்றது.
அரச தொழில் முயற்சி மறுசீரமைப்புப் பிரிவினரும் மத்திய வங்கியின் ஆளுநரும் இது தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் குறிப்பிட்ட கருத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஒன்றிய செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச வங்கிகள் மீது உத்தியோகபூர்வ உரிமைகளைக் கொண்ட நிதி அமைச்சும் அதன் செயலாளரும் நாட்டுக்கு அவசர விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.





