இலங்கை இராணுவத்தினரின் நெகிழ்ச்சியான செயல்!
பேரிடர் நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட 300,000 ரொக்கம் மற்றும் சுமார் 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை இலங்கை இராணுவ வீரர்கள் அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.
ஹங்குரான்கெத்த பிரதேச செயலகப் பிரிவுக்குள் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் நடவடிக்கைகளின் போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிலச்சரிவால் முற்றிலுமாக அழிவடைந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து பணம் மற்றும் நகை என்பன மீட்கப்பட்டதாகவும் அவை பாதுகாப்பாக உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





