இலங்கை

வங்கி முறைக்கேடுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊழல் மோசடிகள் பற்றி குறிப்பிடவில்லை!

நாட்டின் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை வங்கிகள் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை வங்கியில் தடயவியல் தணிக்கையை மேற்கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அது மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் தர்மஸ்ரீ குமாரதுங்க, புதிய கொடுப்பனவு கருவிகள் மூலம் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு  தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!