பிரேசிலை புரட்டி போட்ட மழை வெள்ளம் ; பலியானோர் எண்ணி்கை 107 ஆக உயர்வு

தெற்கு பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே சுல் மாநில தலைநகர் போர்டோ அலெக்ரே உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டிவருகிறது.
இதனால் அந்த நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறிவிட்டன. பாலங்கள்,ரோடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 107- ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 134 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
படகு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் தெற்கு பிரேசில் பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
(Visited 52 times, 1 visits today)