இலங்கையர்களுக்கு எமனாக மாறியுள்ள வெறிநாய்கள்!! 69 பேர் பலி

2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் 69 பேர் வெறிநாய்க்கடியால் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.
அந்த வருடங்களில் நாய்க்கடி காரணமாக 201,854 பேர் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ அனுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)