அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள சில கட்சிகளுடன் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாடு எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது.
இந்த சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் மேல் மாகாண அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் நாளை கொழும்பில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.