இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஜெர்மனியில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுப்பதில் சிக்கல் – சுற்றிவளைக்கும் துப்பறியும் அதிகாரிகள்

ஜெர்மனியில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் அதன் உண்மைத்தன்மையை அறிய துப்பறியும் அதிகாரிகளை நிறுவனங்கள் நியமித்து வருகின்றன.

ஜெர்மனியில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் நோய்வாய்ப்பட்ட விடுப்பு (Sick Leave) விகிதம் தொடர்ந்து வருவதாக பல நிறுவனங்கள் கூறி வந்தன.

இந்த நிலையில், பணியாளர்கள் உண்மையில் நோய்வாய்ப்பட்டிருக்கின்றனரா என்பதை அறிய துப்பறியும் அதிகாரிகளை நிறுவனங்கள் பணியமர்த்தி வருகின்றன.

பணியாளர்களின் வருகை பற்றாக்குறை அதிகரிப்பதால் நிறுவனங்களின் வரவு செலவுகளில் நிலைமை பாதிக்கப்படுவதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில், 2021 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் சராசரியாக 11.1 நோய்வாய்ப்பட்ட விடுப்பு நாள்களையும், 2023 ஆம் ஆண்டில் 15.1 நாள்களையும் கொண்டுள்ளனர்.

இந்த உயர் வருகை இல்லாமை விகிதத்தால், ஜெர்மனியில் 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவிகிதம் குறைந்து, குறிப்பிடத்தக்க பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியது எனலாம்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்