பிரான்ஸில் கூடாரங்களில் வசிப்பவர்களுக்கு எழுந்துள்ள சிக்கல்!
பிரான்ஸில் பாரிஸ் சிட்டி ஹாலுக்கு அருகில் உள்ள ஒரு கூடாரத்தில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நடவடிக்கை இன்று (30.04) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் வீடற்றவர்களை வெளியேற்றும் நடவடிக்கை சமூக சுத்திகரிப்பு என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று விடியற்காலையில் மேற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த சுமார் 100 டீனேஜ் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாரிஸ் போலீசார் தெரிவித்தனர்.
இவ்வாறு வெளியேற்படுபவர்கள் லோயர்-பிராந்திய நகரமான ஏங்கர்ஸில் தற்காலிகமாக மூன்று வாரங்களுக்கு தங்க வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்காக அவர்களை பாரிஸ் பிராந்திய போக்குவரத்து மையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அருகிலுள்ள தெருவில் ஒரு பேருந்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குறித்த பேருந்தில் வெகு சிலரே ஏறியதாகவும், பலர் அங்கிருந்து தமது உடமைகளை எடுத்துக்கொண்டு வேறு இடத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
காரணம் இவ்வாறு தற்காலிக கூடாரங்களுக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் மூன்று வாரங்களின் பின்னர் கைவிடப்படுவதாக கூறப்படுகிறது.