இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித எலும்புக்கூடுகளை இனங்காணுவதில் சிக்கல்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இருந்து மனித எலும்புக்கூடுகளை இனங்காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக எலும்புக்கூடுகள் ஒன்றின் மீது ஒன்றாக குவிந்து காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படுகிறது என்பதை இனங்காணமுடியவில்லை என அகழ்வாராய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொக்குத் தொடுவாய் பகுதியில் இன்று (11.09) ஐந்தாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  இன்றைய அகழ்வுப் பணியில் எலும்புக்கூடுகளுடன், துப்பாக்கி ரவை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எலும்புக்கூடுகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், அடுக்குகளாகவும் காணப்படுவதாக தெரிவித்த அவர், இன்னும் ஓரிரு தினங்கள் எத்தனை எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்