வெற்றிகரமாக நடைபெற்ற வேல்ஸ் இளவரசியின் அறுவை சிகிச்சை

வேல்ஸ் இளவரசி இரண்டு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கெனிங்ஸ்டன் அரண்மனை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
42 வயதான வேல்ஸ் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன் மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“இளவரசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அவர் அடுத்த 10-இல் இருந்து 14 நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க இருக்கிறார்.
தற்போதைய மருத்துவ அறிவுரைகளின் படி அவர் மார்ச் 31-ம் தேதி வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்,” என அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கேட் மிடில்டன்னுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
(Visited 15 times, 1 visits today)