லண்டனில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றுக்கு பிரதமர் அலுவலகம் எதிர்ப்பு!
லண்டனில் பிராட்வே நாடகம் நடத்த திட்டமிட்டுள்ள கறுப்பர்களுக்கான நிகழ்வு தவறானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
லண்டனின் வெஸ்ட் எண்டில் உள்ள நோயல் கோவர்ட் தியேட்டரில் காண்பிக்கப்படும் “ஸ்லேவ் ப்ளே” என்ற நிகழ்வு ( Black Out) கறுப்பர்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்நிகழ்வு சமூகத்தில் பல சிக்கல்களை தோற்றுவிக்கும் என நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர், கலைகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் திறந்ததாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.





