பெல்ஜியம் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து பதவியை ராஜினாமா செய்த பிரதமர்
பெல்ஜியம் நாட்டின் பிரதமராக இருந்தவர் அலெக்சாண்டர் டி குரூ. 48 வயதான இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேசிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் அவர் கூறும் போது, “தேர்தல் பிரசாரத்தில் நான் முக்கிய தலைவராக இருந்தேன். இது நான் எதிர்பாராத முடிவு. எனவே இதற்கு நானே பொறுப்பேற்கிறேன்.
இன்று முதல் நான் எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன். நடப்பு விவகாரங்களில் நான் இனி கவனம் செலுத்துவேன்” என்று தெரிவித்தார். அவர் ராஜினாமா முடிவை அறிவிக்கும் போது கண்ணீர் விட்டு அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)