இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளின் விலையை குறைக்க முடியாது
கையடக்கத் தொலைபேசிகளின் விலையை 20 வீதத்தால் குறைக்க முடியும் என சில சங்கங்கள் கூறினாலும், தற்போது அந்த நிவாரணத்தை நுகர்வோருக்கு வழங்குவது கடினம் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலையை 20 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி பலப்படுத்தப்பட்டதன் பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அதிக விலை கொடுத்து வாங்கிய பொருட்களை வாடிக்கையாளருக்கு இவ்வளவு குறைந்த விலைக்கு வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
குறைக்கப்பட்ட டொலரின் அனுகூலம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.