ஏறிய வேகத்தில் திடீரென குறைந்த தங்கத்தின் விலை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை 20,000 குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (30) காலை கொழும்பு தங்க சந்தை நிலவரங்களின்படி, “22 காரட்” தங்கத்தின் விலை 368,000 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்று (29) 386,400 ரூபாயாக பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், நேற்று 420,000 ஆக இருந்த “24 காரட்” தங்கத்தின் விலை இன்று 400,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.




