மீண்டும் 8000 ரூபாவால் அதிகரித்தது தங்கத்தின் விலை!
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து இலங்கையிலும் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 8000 ரூபாயால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
கொழும் ஹெட்டி வீதி தங்க நிலவரங்களுக்கு அமைய, 22 காரட் பவுண் ஒன்றின் விலை 7000 ரூபாவால் அதிகரித்து மூன்று இலட்சத்து 600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இது கடந்த வெள்ளிக்கிழமை 293,200 ஆகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 325,000 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை 3,17000 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.





