ஜனநாயகத்திற்கு விரோதமாக ஜனாதிபதி செய்ல்படுகிறார் – MP இரா.சாணக்கியன்
பௌத்த மக்களையும் தமிழ் மக்களையும் ஒரு முறுகல் நிலைக்குள் கொண்டுசென்று தாங்கள் ஆட்சிக்கு வரலாமா என்கின்ற ஆய்வு செய்வதற்கான முதல்கட்டபடியாக வடக்கு கிழக்கிலே இந்த சில சம்பவங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
ஜனநாயக விரோதமாக செயல்படும் ஒரு ஜனாதிபதி ஜனநாயக ரீதியாக மக்களுக்கு தீர்மானத்தை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை இந்த ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து ஏனைய தேர்தல் ஊடாக சந்தர்ப்பம் வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக்கருத்துகளை அவர் முன்வைத்தார்.
கடந்த இரு வாரங்களாக மாவட்டத்திலே இடம்பெறும் விடயங்களை அவதானிக்கின்ற போது குறிப்பாக மாவட்டம் மட்டுமல்ல வடக்கு கிழக்கு நாடளாவிய ரீதியிலே நடைபெறும் விடயங்களை பார்க்கின்ற போது நான் ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழர்களுக்கு ஒரு மிகவும் இறுக்கமான ஆபத்தான காலம் உருவாகலாம் என குறிப்பிட்டு
இருந்தேன்.