இலங்கை: துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்த ஜனாதிபதி!
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
டேமியன் அமல் கப்ரால், மொஹான் ரே அபேவர்தன, சஞ்சய குலதுங்க, மற்றும் கலாநிதி ஹர்ஷ சுபசிங்க ஆகியோர் ஆணைக்குழுவின் எஞ்சிய உறுப்பினர்களாவர்.
உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் இன்று (டிசம்பர் 13) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.
(Visited 1 times, 1 visits today)