இலங்கையில் மீண்டும் மின்நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு!
உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நிதி திவால்நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் பாராளுமன்ற விசேட குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு உரையாற்றிய மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா, அரசாங்கங்கள் எடுக்கும் சில தீர்மானங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அமைவாக மின் உற்பத்தி நிலையங்கள் இயங்காததன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவிக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
செயற்திறன் ஆற்றல் இனங்களைப் பயன்படுத்தி எதிர்கால உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பாரிய நிலத்தடி சோலார் பேனல் மின் உற்பத்தி திட்டத்திற்கான மின்சார கொள்வனவு ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபையும் அது தொடர்பான தனியார் நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளன.