பிரான்ஸ் ஜனாதிபதியின் நிலை – இதுவரை இல்லாத அளவு நம்பிக்கையை இழந்த மக்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.
நாட்டு மக்களில் 22 சதவீதமானவர்கள் மாத்திரமே ஜனாதிபதியை நம்புவதாக கடந்த 3ஆம் திகதி வெளியான கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் முதன் முறையாக மக்ரோன் ஜனாதிபதியானதில் இருந்து அவர் பெற்ற மிகக் குறைந்த நம்பிக்கையின்மை இதுவாகும்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு மஞ்சள் மேலங்கி அணிந்து தொழிற்சங்கத்தினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிருந்தனர். அதன் போது மக்ரோன் மீதான நம்பிக்கையின்மை 23% சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்திருந்தது. அதுவே அவர் பெற்ற மிக குறைந்த புள்ளியாக இருந்து.
இந்த நிலையில், தற்போது புதிய அரசாங்கம் அமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்களினால் இந்த புள்ளி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.