ஜெர்மனி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார்
ஜெர்மனியில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணத்தாள்கள் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
போலி பணத்தாளின் பாவணை தொடர்பில் தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வரும் நிலையில் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெர்மனியில் கடந்த 7 வருடங்களுடன் ஒப்பிடும் போலி பணத்தாள்களின் பாவணையானது அதிகரித்துள்ளமையினால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் மட்டும் 38578 போலி பணத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு 2.4 மில்லியன் யூரோக்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
(Visited 4 times, 1 visits today)