இலங்கை செய்தி

பொலிஸ் அதிகாி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு பலி

மாத்தறை, கொட்வில நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இன்று தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொட்வில நீதிமன்ற வளாகத்தின் முன் வாயிலுக்கு அருகில் குறித்த அதிகாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

பல நாட்களாக சுகயீன விடுமுறையில் சென்றிருந்த நிலையில் குறித்த அதிகாரி இன்று அந்த இடத்திற்கு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறும் போது உயர் அதிகாரி ஒருவரால் அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை