மத்திய கிழக்கு

காசாவில் பாலஸ்தீனிய பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை..

இஸ்ரேல் – காஸா இடையே நடந்து வரும் போரின் காரணமாக காஸா நகரில் அனைத்து பொருட்களுக்குமே கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் நாப்கின்கள் கிடைக்காததால் மாதவிடாய் கண்ட பெண்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

இஸ்ரேல் தாக்குதல் கடுமையாக நடந்துவரும் நிலையில், காஸாவுக்கு உண்வு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் சென்றடைவதில் தடைகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.நா உட்பட சர்வதேச அமைப்புகள், நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் நிவாரணப் பொருட்கள் கிடைக்காததன் எதிரொலியாக, பாலஸ்தீனிய பெண்கள் பலரும் தங்கள் மாதவிடாய் காலத்தை தடுமாற்றத்தோடு எதிர்கொண்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பது, வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது, பல நூறு பேருக்கு மத்தியில் இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை, நாப்கின் – டேம்பான்ஸ் – மென்சுரல் கப் போன்றவை கிடைப்பதில் பிரச்னை போன்ற காரணங்களினால் அப்பெண்கள் தடுமாறி வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் கைவசமிருந்த, மாதவிடாயை தள்ளிப்போடுவதற்கான மாத்திரைகள் மூலமாக தற்காலிகமாக சமாளித்து வருகிறார்கள்.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.