இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

சீனாவில் 80 மணி நேரம் பணிபுரிந்த பிரித்தானியரின் பரிதாப நிலை – பிரபலமடைந்த பதிவு

சீனாவில் பணிபுரியும் பிரித்தானியர் ஒருவர் தம்முடைய நீண்ட வேலைநேரத்தைப் பற்றி இணையத்தில் பகிர்ந்த பதிவு மிகவம் பிரபல்யமடைந்துள்ளது.

சீனாவில் வேலைநேரம் 996 என்று அழைக்கப்படுகிறது. காலை மணி 9 முதல் இரவு 9 மணி வரை, வாரத்தில் 6 நாள்களுக்கு வேலை செய்வதை 996 குறிக்கிறது.

ஜேக் ஃபொர்ஸ்டைக் சீனாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான NetEase-இல் பணிபுரிகிறார்.

2022ஆம் ஆண்டில் அவர் மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டார். அதில் அவர் கூடுதல் நேரம் வேலை செய்யத் தேவையில்லை. இவ்வாண்டுத் தொடக்கத்தில் அவர் விளையாட்டுகளை வடிவமைக்கும் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

ஏப்ரல் மாதம் தம்முடைய வேலைப்பளு அதிகரித்ததாகத் தெரிவித்தார். சில நேரங்களில் ஒரு வாரத்தில் 80 மணிநேரம் வரை வேலை செய்ய வேண்டியிருக்கும். கூடுதல் நேர வேலை கட்டாயமில்லை என்றபோதிலும் சக ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்ததால் தாமும் அவ்வாறு செய்ததாகக் கூறினார்.

தாம் சோர்வாக இருப்பதைக் காட்டும் படத்தை ஜேக் சமூக ஊடகத்தில் பதிவுகளாகப் பதிவேற்றம் செய்தார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!