தென்கொரியாவை அதிர வைத்த விமான விபத்து – விபத்துக்கு காரணமாகிய power bank

தென்கொரியாவில் Air Busan விமான விபத்துக்கு power bank காரணமாக இருக்கலாம் என அரசாங்கம் கூறியுள்ளது.
ஜனவரி மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் விமானம் பூசான் நகரிலிருந்து ஹாங்கொங்கிற்குப் புறப்படவிருந்தது.
விமானம் புறப்படுவதற்கு முன் விமானத்தின் வால் பகுதி தீப்பற்றிக்கொண்டது. பின்னர் விமானத்தில் இருந்த 179 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இருக்கைக்கு மேல் பைகளை வைக்கும் இடத்திலிருந்து தீ தொடங்கியதாக விசாரணை அதிகாரிகள் கூறினர். மின்னூட்டம் செய்யும் சாதனம் தீப்பற்றி எரிந்ததற்கான தடயங்களைக் கண்டதாக அவர்கள் கூறினர்.
சாதனத்தின் உள்பகுதி பழுதாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். விமானத்தின் மின்சார செயல்முறை பழுதடைந்ததற்கு அறிகுறி இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில் விசாரணை முடிவுகள் அடுத்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விபத்துக்குப் பிறகு Power Bank சாதனங்களுக்கு எதிராக Air Busan நடவடிக்கை எடுத்துள்ளது.
இருக்கைக்கு மேல் பைகளை வைக்கும் இடத்தில் சாதனத்தை வைக்கக்கூடாது என்று அது அறிவித்தது.