நடுவானில் உயிரிழந்த விமானி : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
சியாட்டிலில் இருந்து இஸ்தான்புல் நோக்கிச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரமாக நியூயார்க்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தின் விமானி நடுவானில் உயிரிழந்த நிலையில் மேற்படி தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் இருந்த 59 வயதான அவருக்கு அவசர சிகிச்சை அளித்து அவரை உயிர்ப்பிக்க முயன்றனர், ஆனால் விமானம் தரையிறங்குவதற்குள் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
துணை விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதாக நம்பப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு சியாட்டிலில் இருந்து ஏர்பஸ் ஏ350 விமானம் புறப்பட்டு சிறிதி நேரத்தில் இவ் அனர்த்தம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.





