அடுத்த உசைன்போல்ட் எனக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரரின் தனிப்பட்ட சாதனை!
 
																																		அடுத்த உசைன் போல்ட் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரேலிய இளம் வீரர் கௌட், U20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பிரிஸ்பேனில் பிறந்த 16 வயதான அவர், தற்போது பெருவின் லிமா நகரில் இடம்பெற்று வரும் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தனது தனிப்பட்ட சாதனையை படைத்தள்ளார்.
இதன்படி இறுதி போட்டியில் 20.60 வினாடிகளில் தனது இலக்கை அடைந்து அவர் சாதனை படைத்துள்ளார்.
பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் ஜேக் ஒடே-ஜோர்டன் 20.81 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அதேபோல் தென் அமெரிக்க வீரரான பயண்டா வலாசா 20.54 என்ற கணக்கில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளார்.
இதேவேளை உசைன் போல்ட், 2002ல் நடந்த போட்டியில் பங்கேற்ற போது 20.61 வினாடிகளில் தனது இலக்கை அடைந்து சாதனை படைத்தார். இந்நிலையில் போல்ட்டின் 2002 நேரத்தை விட கீல்ட் 0.01 வினாடிகள் வேகமாக ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
        



 
                         
                            
