வட அமெரிக்கா

அமெரிக்காவில் நீதிமன்ற வாசலில் திடீரென பரபரப்பை ஏற்படுத்திய நபர்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் வழக்கு நடைபெறும் நீதிமன்ற வாசலில் நபர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.

தொலைக்காட்சி கேமராக்களின் முன்னிலையில் அவர் சில நிமிடங்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாகச் சம்பவத்தில் நேரில் பார்த்தவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

தீக்குளித்த அந்த 40 வயது ஆடவர் உயிர்பிழைத்துவிட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

அவர் ஏன் தீக்குளித்தார் என்பது தெரியவில்லை. டிரம்ப்பைத் தாக்கும் நோக்கம் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

அவர் தமது பையிலிருந்து துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டுத் தீயிட்டுக் கொண்டார். அந்தப் பிரசுரங்களில் பில்லியன் கணக்காகப் பணம் வைத்திருப்பவர்கள் கொடியவர்கள் என்று எழுதப்பட்டிருந்ததாக செய்தி நிறுவனம் கூறியது.

 

(Visited 27 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்