அமெரிக்காவில் அபராதச் சீட்டை பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் வேக வரம்பை மீறியதற்காக நபர் ஒருவருக்கு 1.4 மில்லியன் டொலர் அபராதச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கொனர் கேட்டோ (Connor Cato) எனப்படும் அந்த ஆடவர் நபர் எழுத்துப் பிழையாக இருக்கும் என்று முதலில் நினைத்தார்.
உடனடியாக நீதிமன்றத்தையும் தொடர்புகொண்டார். ஆனால் அவர் அபராதத்தைச் செலுத்தவேண்டும் அல்லது நீதிமன்றத்திற்கு நேரில் வரவேண்டும் என்று கூறப்பட்டது.
பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது, 1.4 மில்லியன் டொலர் என்பது சீட்டில் தானாகவே வரக்கூடிய தொகை என்றார். அது உண்மையான அபராதம் இல்லை.
உண்மையான அபராதத் தொகையை நீதிபதிதான் நிர்ணயிப்பார். அது அதிகபட்சம் 1,000 டொலராக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
சென்ற மாதம் சவானா நகரில் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் 89 கிலோமீட்டர் வேக வரம்புள்ள சாலையில் அவர் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் சென்றிருக்கிறார். அதற்காக அவருக்கு அபராதச் சீட்டு வழங்கப்பட்டது.