வெற்றிலை பறிக்க மரத்திலேறியவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..
புத்தாண்டுக்காக வெற்றிலை பறிப்பதற்கு மரமொன்றில் ஏறியவர், கிளை முறிந்து விழுந்தமையால், கிணற்றில் விழுந்து மரணமாக சம்பவமொன்று பலாங்கொடை சத்தல்பொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
துங்கிந்த திஸாநாயக்கலைச் சேர்ந்த (52) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தாண்டு பண்டிகைக்கு தேவையான வெற்றிலையை பறிக்க தோட்டத்தில் உள்ள40 அடி மரத்தில் ஏறியுள்ளார்.
மரத்தின் இற்றுப்போன கிளை ஒன்றை பிடித்தபோது அக்கிளை முறிந்தமையால் அவர், மரத்திலிருந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 24 times, 1 visits today)





