பிரான்ஸ் ஜனாதிபதியை மீண்டும் விரும்பும் மக்கள்!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பிரபலத்தன்மை உயர்ந்துள்ளது.
நீண்ட நாட்களின் பின்னர் இது உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக ஓய்வூதியம் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி பிரபலத்தன்மையை இழந்த (18 புள்ளிகள்) மக்ரோன், தற்போது 6 புள்ளிகள் உயர்வடைந்து 26 புள்ளிகள் பிரபலத்தன்மையுடன் உள்ளார்.
அதேவேளை, பிரதமர் Élisabeth Borne இன் பிரபலத்தன்மையும் அதிகரித்துள்ளது.
அவர் சென்ற மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 புள்ளிகள் அதிகமாக பெற்று 32 புள்ளிகளுடன் உள்ளார்.
மேற்படி கருத்துக்கணிப்பை BVA நிறுவனம் RTL ஊடகத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)