ஐரோப்பா

ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில்

ரஷ்யாவுடனான போரின் முடிவு, மேற்கத்திய நட்பு நாடுகளின் ஆயுத உதவியையும், அதைப் போரில் பயன்படுத்துவதற்கான அனுமதியையும் பொறுத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அடுத்த வாரம் அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டோருடன் தாம் மேற்கொள்ள உள்ள சந்திப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிடம் தற்போதுள்ள ஆயுதங்களோ, ட்ரோன்களோ, ஏவுகணைகளோ போதுமானதாக இல்லை என்றும், உக்ரைனின் பாதுகாப்பு, சுதந்திரம், வெற்றி அனைத்தும் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் ஆதரவைப் பொறுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!