போரின் முடிவு எங்கள் கையில்: ஈரான் பதிலடி!
“போரின் முடிவை நாங்களே தீர்மானிப்போம்.” என்று , ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான. பிராந்தியத்தின் சமன்பாடுகளும் எதிர்கால நிலையும் இப்போது நமது ஆயுத படைகளின் கைகளில் உள்ளன.
அமெரிக்கப் படைகள் போரை முடிவுக்குக் கொண்டுவராது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.




