பெண்னொருவரின் தியாகத்தை பாராட்டிய கின்னஸ் உலக சாதனை அமைப்பாளர்கள்! அட அப்படி என செய்தார்?
அமெரிக்காவை சேர்ந்த எலிசபெத் என்ற பெண் தனது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தாய்ப்பால் இல்லாத பல குழந்தைகளுக்கும் தாய்ப்பாலை தானமாக வழங்கி வருகிறார்.
அவரது தியாகத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பாளர்கள் பாராட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் ஓரிகானை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் உள்ள ஒருவர். இவர் ஒவ்வொரு ஒன்பது நிமிடங்களுக்கும் பால் உற்பத்தி செய்கிறார். இவரின் இந்த குறைபாடு பல குழந்தைகளை பசியைப் போக்கியிருக்கிறது.
அவரது உடல் ஒரு நாளைக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது. இது சராசரி தாயின் தாய்ப்பாலை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகம்.
2014 ஆம் ஆண்டில், அவர் ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோயால் கண்டறியப்பட்டபோது, அவரது மார்பகங்கள் கற்பனை செய்ய முடியாத அளவு தாய்ப்பாலை உற்பத்தி செய்தன. அந்த நேரத்தில், தனது தாய் பால் வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், மற்ற தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார்.
2 குழந்தைகளின் தாயான இவர், ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உணவளித்துள்ளார். இது குறைமாத குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவுகிறது.