இலங்கை சென்றவருக்கு பெல்ஜியம் நாட்டவரால் ஏமாற்றம்
இலங்கைக்கு சென்ற ஜெர்மன் நாட்டவரை ஏமாற்றிய பெல்ஜியம் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் கூடிய சொகுசு வீடுகளை நிர்மாணிப்பதாக கூறி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமொன்றில் பணிப்பாளராக கடமையாற்றிய பெல்ஜியம் பிரஜை ஒருவரே ஏமாற்றியுள்ளார்.
ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான மோசடி செய்து நாட்டை விட்டு வெளியேறும் போது குற்றப்புலனாய்வு திணைக்கள கட்டுநாயக்க விமான நிலைய பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம் விவோ தனியார் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த வான் டோரன் என்ற பெல்ஜியம் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு நிர்மாணப் பணிகளுக்காக ஜேர்மன் பிரஜையான Hans Mathias கேஸிடம் இருந்து ஆறு இலட்சத்து முப்பத்தெட்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை இந்த நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.
எனினும் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யவில்லை என்ற முறைப்பாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெல்ஜியம் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டை விட்டு வெளியேறவிருந்தார்.
இதன் போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரையின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் தேஷான் மாரசிங்க உள்ளிட்ட குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.