ஐரோப்பா

பிரிட்டிஷ் விமான நிலையங்களில் மீண்டும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பழைய விதிமுறை

பிரிட்டனில் உள்ள ஆறு விமான நிலையங்கள் பயணப் பைகளில் 100 மில்லி லிட்டருக்கு மேல் நீர் சார்ந்த பொருள்களைப் பயணிகள் எடுத்துச்செல்லக் கூடாது என்று அறிவித்துள்ளன.

கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாக இந்த நடைமுறை அகற்றப்பட்டிருந்த நிலையில் அது தற்போது மீண்டும் நடப்புக்கு வந்துள்ளது.

நியூகாசல், லீட்ஸ் பிராட்ஃபர்ட், லண்டன் சிட்டி, அபெர்டீன், சவுத்என்ட், டீசைட் விமான நிலையங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படும்.

புதிய அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை சோதிக்க இந்த நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நடைமுறை தற்காலிகமானது என்றும் அது விரைவில் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!