அறிவியல் & தொழில்நுட்பம்

ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன் வெளியிடுவதற்கான காரணத்தை வெளியிட்ட அதிகாரி

இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்நாளில் ஒருமுறையாவது ஐபோன் வாங்கி விட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு ஐபோன் இந்த உலகில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்து மிகப்பெரிய ப்ராண்டாக மாறியுள்ளது. ஆனால் ஐபோன் நீண்ட காலம் உழைக்கும் தரத்துடன் தயாரிக்கப்பட்டாலும், ஏன் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடலை அறிமுகம் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதாவது கடந்த ஆண்டு ஐபோன் 14 மாடல் வாங்கியவர்கள், இந்த ஆண்டு ஐபோன் 15 மாடல் வந்ததும் ஏன் உடனடியாக பழைய போனை மாற்ற வேண்டும்? ஐபோன் 14 வெளிவந்தபோது கூட அதில் டைனமிக் ஐலேண்ட் என்ற புதிய வசதியுடன் வெளிவந்தது. ஆனால் பலர் இந்த வசதி எங்களுக்கு ஏன் தேவை என கேள்வி எழுப்பினர்.

அதேபோல ஒவ்வொரு மாடல் வெளிவரும்போதும் அதில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வெளிவருகிறது. இவை அனைத்தையும் பயனர்கள் முழுமையாக பயன்படுத்துகிறார்களா என்பதுகூட தெரிவதில்லை.

ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களே, நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் வகையில் தான் ஐபோன்கள் தயாரிக்கப்படுவதாக கூறிவரும் நிலையில், ஒவ்வொரு வருடமும் வெளிவரும் புதிய ஐபோனை வாங்குவது அறிவுப்பூர்வமானதா? என்ற கேள்விக்கு அதன் சிஇஓ டிம் குக் விளக்கம் அளித்துள்ளார்.

“மக்கள் தாங்கள் வைத்திருக்கும் ஐபோனை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக மாற்றுவதை நல்ல விஷயமாகவே நான் பார்க்கிறேன். ஏனென்றால் வாழ்க்கையில் புதிய விஷயங்களை அப்டேட் செய்வதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

இவர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் புதிய நபர்களுக்கு புது விதமான போன்கள் தேவைப்படும். மற்ற போன்களில் இத்தகைய வசதி கிடையாது. இதை ஆப்பிள் நிறுவனம் நல்லதாகவே பார்க்கிறது” என டிம் குக் கூறினார்.

மேலும், ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதை விற்க முடிவு செய்தாலும் எல்லா வகையிலும் ஆப்பிள் அவர்களுக்கு உதவுகிறது. ஒருவருக்கு தான் பயன்படுத்தும் சாதனம் பிடிக்கவில்லை என்றால் அதை நாங்களே புதுப்பித்து பிறருக்கு விற்பனை செய்கிறோம்.

ஒருவேளை ஃபோன் சரியாக வேலை செய்யாவிட்டாலும் அதை சரி செய்து புதிய போனாக மாற்றுகிறோம் என டிம் குக் கூறுகிறார்.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன் வாங்குவது தேவைதானா என்ற கேள்விக்கு அவர் எவ்விதமான பதிலையும் கூறவில்லை.

ஆனால் அவர் கூறிய பதில் மூலமாக பழைய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் என்ன செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

 

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!