சூடானில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : 440 மில்லியன் தேவைப்படுவதாக ஐ.நா தெரிவிப்பு!
சூடானில் வெடித்துள்ள உள்நாட்டு கலவரம் காரணமாக அங்கிருந்து பெருமளவானோர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், அவர்களை தங்கவைக்க 445 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ஐநா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“சூடான் மற்றும் அதைச் சுற்றியுள்ள மனிதாபிமான நிலைமை சோகமானது என்றும், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் அடிப்படை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது” என்றும் UNHCR வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
860,000 என்பது நிதி மற்றும் செயல்பாட்டுத் திட்டமிடலுக்கான தோராயமான மதிப்பீடாகும் என்று UNHCR கூறியது.
தற்போதைய சண்டையின் விளைவாக 330,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே சூடானில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சம் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மோதல் தொடங்கியதில் இருந்து 550 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 5,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் சூடான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.