வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையானது கடந்த வருடம் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை 154.4% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.
அதன் படி, வெளிநாட்டு வேலைகளுக்கான புறப்பாடு 2021 இல் 122,264 ஆக இருந்துடன் 2022 இல் 311,056 ஆக அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் நாட்டில் நிலவிய பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக வெளிநாட்டு வேலைகளுக்கான புறப்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது.
முறையே 60.1 சதவீதம் மற்றும் 39.9 சதவீதம் ஆண்கள் மற்றும் பெண்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்
2022 ஆம் ஆண்டில் அதிக வேலை தேடுபவர்களைக் கொண்ட பிராந்தியமாக மத்திய கிழக்கு பிராந்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)