இலங்கையில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்த வருட காலப்பகுதியில், கிட்டத்தட்ட 350 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று STD மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் அறிவித்துள்ளது.
இன்று (23.08) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட STD மற்றும் AIDS திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 607 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், 15 தொடக்கம் 49 வயதுக்குட்பட்டவர்களிடமே STDகள் அதிகம் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)